Thursday, July 12, 2018

இணையதளம் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு பதிவு: ஜூன் 25, 2018 02:42

தகவல், தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியால் இப்போது செல்போன், உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் போன்றவற்றை இப்போது இணையதளம் வழியாக வாங்குகிற ‘ஆன்லைன் ஷாப்பிங்’ அதிகரித்து
வருகிறது. குறிப்பாக இளையதலைமுறையினர் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு, இணையதளம் வழியாக 10 கோடியே 80 லட்சம் பேர் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும், சாதனங்களையும் வாங்கி உள்ளனர்.

இந்த ஆண்டிலும் இப்படி இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. குறிப்பாக 12 கோடிப்பேர் இந்த ஆண்டு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவார்கள் என்று ‘அசோசாம்’ என்று சொல்லப்படுகிற இந்திய தொழில், வர்த்தக சபை மற்றும் ரீ சர்ஜன்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்குவோரில் 60 முதல் 65 சதவீதம்பேர் செல்போனில் ‘ஆர்டர்’ செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர், தங்களுக்கு உரிய பொருள் அல்லது சாதனம் கையில் கிடைக்கிறபோது பணம் செலுத்தும் வழியை தேர்ந்தெடுத்து உள்ளனர். 

ஆன்லைன்ஷாப்பிங்கில் ஜவுளிரகங்கள் வீட்டுஉபயோக பொருட்கள் வாங்க நம்பிக்கையான இந்திய தளம் Shop 101 ல் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக்கவும்


No comments:

Post a Comment